இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு , என்றும் கூறப்படும். இந்நாடு வெள்ளலூர் , அம்பலக்காரன் பட்டி, உறங்கரன் பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களை யுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும் , மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும் உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப்புலி , சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்காலி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரையென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையென்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.
மாகாணக்கூட்டம் , நாட்டுக்கூட்டம் என இரு விதக் கூட்டங்கள் இங்கேஉண்டு மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும் , குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும் , 22 கரையம்பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவது நீதி (சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகளும் உண்டு. அபராதம் வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்படும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது நாடு முழுவதும் ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்
No comments:
Post a Comment