Tuesday, February 14, 2012

உறங்கான்பட்டியில் - தீயில் 6 வீடுகள் எரிந்து நாசம்

மேலூர் உறங்கான்பட்டியில் உள்ளது முத்தாயி ஊரணி. நேற்று மதியம் 3 மணியளவில் இவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி காளியம்மாள் சமையல் செய்யும் போது வீட்டில் தீப்பிடித்தது.
இந்த தீ அருகில் உள்ள சின்னையா, முத்துலட்சுமி, மந்தக்காளை, அமுதா, ஆண்டி ஆகியோர் வீடுகளிலும் பரவியது.
தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு கோட்ட அலுவலர் கருப்பையா, நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய், தானியங்கள், 'டிவி', பீரோ, கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

vellalur Valladikaarar

VellAloRe Nadu

மேலூர் :மேலூர், பழையூர்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம்,45. மோட்டார் பைக்கில் மேலூர் வந்த இவர் சிவகங்கை ரோட்டில் திரும்பிச் சென்றார்
(ஹெல்மெட் அணியவில்லை). வண்ணாம்பாறைப்பட்டி வளைவில் செல்லும் போது, எதிரில் மேலூர் நோக்கி சென்ற கண்ணாத்தாள் பஸ் மோதி, தலையில் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

Monday, February 13, 2012

வெள்ளூர் நாடு - கள்ளர் சரித்திரம் - 6

இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு , என்றும் கூறப்படும். இந்நாடு வெள்ளலூர் , அம்பலக்காரன் பட்டி, உறங்கரன் பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களை யுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும் , மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும் உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப்புலி , சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்காலி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரையென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையென்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.

மாகாணக்கூட்டம் , நாட்டுக்கூட்டம் என இரு விதக் கூட்டங்கள் இங்கேஉண்டு மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும் , குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும் , 22 கரையம்பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவது நீதி (சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகளும் உண்டு. அபராதம் வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்படும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது நாடு முழுவதும் ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்

வெள்ளூர் நாடு :

தேசியமும் தெய்விகமும் நமது இரு கண்கள். இவன் வெள்ளலூர் நாட்டார்களும்..
மற்றும் வெள்ளலூர் வேங்கைகளும்...
இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.

கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்..."வெள்ளலூர் நாட்டின் வேங்கைகள்

வெள்ளூர் நாடு

தேசியமும் தெய்விகமும் நமது இரு கண்கள். இவன் வெள்ளலூர் நாட்டார்களும்..
மற்றும் வெள்ளலூர் வேங்கைகளும்...
மதுரைக் கள்ளர் நாடுகள்
வெள்ளூர் நாடு
இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலை

க்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்

udayar palayurpatty.mp4

Video0011.mp4

VELLALORE NADU 2011(4) V.SURESH MELAVALASAI.3gp

VELLALORE NADU 2011(5) V.SURESH MELAVALASAI.3gp

Thevar jeyanthi @madurai

VellAloRe Nadu

Arul Megu Sri Valladikarar Thiru Kovil - March 2011.

Vellalur temple

Madurai vellalur amman festival - DINAMALAR

Vellalurnadu Vijayaraja.3gp