Tuesday, March 13, 2012

வெள்ளளூரைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் பாஸ்கரன்,45, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட

மதுரை :மதுரை நகர் ஆயுதப்படை தேசியக்கொடிக் கம்பத்தில், நேற்று அதிகாலை சமையல் மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நேற்று காலை 5.30 மணிக்கு, ஆயுதப்படை மைதானத்தில் "பரேடு' பயிற்சிக்காக போலீசார் வந்தனர். அப்போது, அங்கிருந்த தேசியக் கொடி கம்பத்தில், துண்டால் தூக்குப் போட்டு தொங்கி கிடந்த உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக உடல் கீழே இறக்கப்பட்டது.
இந்த நபர் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் இருந்த "மினி டைரியில்' இருந்த மொபைல் போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். இறந்தவர் மதுரை மேலூர் அருகே வெள்ளளூரைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் பாஸ்கரன்,45, என
தெரியவந்தது. சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்த இவர், மனஅழுத்தத்தால் தற்கொலை செய்தாரா என தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆயுதப்படையை தேர்வு
செய்தது ஏன்: மதுரை சிறப்பு ஆறாவது பட்டாலியன் படை நுழைவு வாயிலில், 24 மணி
நேரமும் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. அதேபோல், ஆயுதப்படை நுழைவுவாயில்களில், முன்னர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தற்போது பாதுகாப்பு இல்லாததால்,
வெளியாட்கள் சுதந்திரமாக வந்து செல்கின்றனர்.
பாஸ்கரன் அடிக்கடி ஆயுதப்படை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் சமையல் வேலை செய்துள்ளார். மூன்று நாட்களாக ஊர்
பக்கம் செல்லாத அவர், புதுநத்தம் ரோடு பகுதியில் நேற்று முன் தினம் நடந்த
திருமண நிகழ்ச்சி ஏதாவது ஒன்றுக்கு வந்திருக்கலாம் என்றும், ஊருக்கு செல்லும் வழியில் ஆயுதப்படை மைதானத்தில் தூக்கு போட்டிருக்கலாம்
எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்

Tuesday, February 14, 2012

உறங்கான்பட்டியில் - தீயில் 6 வீடுகள் எரிந்து நாசம்

மேலூர் உறங்கான்பட்டியில் உள்ளது முத்தாயி ஊரணி. நேற்று மதியம் 3 மணியளவில் இவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி காளியம்மாள் சமையல் செய்யும் போது வீட்டில் தீப்பிடித்தது.
இந்த தீ அருகில் உள்ள சின்னையா, முத்துலட்சுமி, மந்தக்காளை, அமுதா, ஆண்டி ஆகியோர் வீடுகளிலும் பரவியது.
தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு கோட்ட அலுவலர் கருப்பையா, நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய், தானியங்கள், 'டிவி', பீரோ, கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

vellalur Valladikaarar